எண் கணித சோதிடம்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்…

இந்த பாடல் வரியின் தத்துவம் தான் அனைத்து கலைகளுக்கும் ஆதாரம். +1 க்கும் -1 க்கும் இடையில் இருப்பது “0” பூஜ்ஜியம். பூஜ்ஜியத்திற்குப் பின்னர் 1, 2, 3, 4 என்று எண்ணிக் கொண்டே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போய்க்கொண்டே இருக்கலாம்.

எண்கணிதம் என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கையும் கடந்து வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கும் ஆதாரமாக இருக்கின்றது.